மும்பையில் ஒருநாள்..!!!!


அடிப்படை தேவை மறந்த தேவதைகளாய்
இம்மண்ணில் பூத்திருக்கும் உயிர்கள்..
அன்னை ஒன்றென அறிந்து 
தந்தை பலரை கண்ட தெய்வங்கள்..

கல்வியை கற்க பள்ளி அறை
கலவி கற்க வீட்டு பள்ளி அறை..
தவழும் மழலை, பலூன் என எடுத்து
ஊதிய உறைகளுண்டு... பல கறைகளுண்டு..

முத்தமும் சத்தமும் கெடுத்த அமைதியை
நித்தமும் நகைத்து கடந்திட்ட நாட்களுண்டு..
அன்பு.. கண்ணில் காணக்கிடைக்கா கடவுள் போல...
நாயும் நங்கையும் உண்டிட்ட தட்டு ஒன்றே..
மழையில் நனைவது பெரிதல்ல.. ஆங்கே
மனங்கள் துடிப்பதே பெரிது..

உறக்கம் தொலைக்கும் உள்ளங்கள்
தினம் உழைக்கும் வர்க்கங்கள்...
முக்கால் உடையணிந்த முழுமதி பல
காலத்தின் உந்துதலே காரணம் என்னும்...
முக்கிய விசயமாய் முந்தி செல்லும்
சினிமாவில் காணா பலக்கதை உண்டிங்கே...

Post a Comment

0 Comments