கவிதை சில்லறைகள்

விண்வெளி அளக்கும் கருவிக்கொண்டே 
அளக்க வேண்டும் நம் காதலை...!!!


காதல் சுவையறிந்தேன்..
உணர்வை சமைத்தபின்....



எறும்பின் கண்ணூடே
காணும் ஆழியென
உணரும் உனதன்பு
உன்னதமானது...!!!!



தண்ணீரில் கரையும் 
நுரைப்போல, 
காதல் செய்வோம் 
குறைப்போக..!!!



திடமாய் இருந்தவனை
திரவமென மாற்றியவளே
வா.. சூடேறி வாயுவாகலாம்..!!!



விழி வழி ஊற்றெடுக்கும் 
காதல் நீரே.. 
என் உயிர் வழி 
உரசி சென்று 
இதயம் தீண்டிடு...
கொஞ்சம் ஈரம் 
ஆக்கிடு...

வறண்ட இதயம்
வளமாய் மாற...!!!




பேரிறைச்சலில் நான் ரசித்திடும் நிசப்தம் நீ...!!!

Post a Comment

0 Comments