மழை நீரால் உடலை அணைத்தபடி
குளிரில் பற்கள் குதிக்க,
குணமில்லா உடலை தாங்கியே
நகர்ந்து வந்தார் முதியவர்....
குளிரில் பற்கள் குதிக்க,
குணமில்லா உடலை தாங்கியே
நகர்ந்து வந்தார் முதியவர்....
அரைப்படா எண்ணங்களை
மனதில் மென்று வந்தவர்
கூரை அருகே குறுகி அமர்ந்தார்..
குழந்தைகளின் குரல் கேட்டவாறே...
மகனை பெற்ற நொடி கிடைத்த
மகிழ்ச்சி சாரலாய் முகத்தில் வீச,
மருமகளுடன் வாதிட்ட நினைவுகளும்
அவ்வப்போது சூடேற்றி குளிரில் இதம் தந்தது..
கனவுகள், கவலைகள் சுமந்தவரை
கால்வரை சென்று தழுவி
ஆறுதல் சொல்லிய நீரில்
உழைப்பின் சுவை கலந்தே சென்றது
இளமை கரைத்த முதுமை போல...
மனதில் மென்று வந்தவர்
கூரை அருகே குறுகி அமர்ந்தார்..
குழந்தைகளின் குரல் கேட்டவாறே...
மகனை பெற்ற நொடி கிடைத்த
மகிழ்ச்சி சாரலாய் முகத்தில் வீச,
மருமகளுடன் வாதிட்ட நினைவுகளும்
அவ்வப்போது சூடேற்றி குளிரில் இதம் தந்தது..
கனவுகள், கவலைகள் சுமந்தவரை
கால்வரை சென்று தழுவி
ஆறுதல் சொல்லிய நீரில்
உழைப்பின் சுவை கலந்தே சென்றது
இளமை கரைத்த முதுமை போல...

0 Comments