"அம்மா மடியிலிருந்து எழுந்து ஓடியவள்
பொங்கிய பாலை நிறுத்தி,
அடுப்பை துடைத்து வீட்டை சுத்தம் செய்தே
தம்பியுடன் நகைத்து பேசிக் கொண்டிருந்தாள்..
சடாலென வயிறு பிடித்து அமர்ந்தவள்
குளியலறை சென்றாள்.. திறக்கபட்டது கதவு..
பூத்த பெண்மை குலுங்க சிரித்தாள்
வெட்கம் கலந்த கண்களாலே...
தந்தை இல்லா வீடென்பதால் அக்கம் பக்கம்
சொந்தங்கள் சூழ சிறப்பாய் நடந்தது சடங்குகள்..
பதிமூன்றை தழுவியவள் படம் கூட
பார்த்திராதவள் தியேட்டரில்...
கருத்தறியா வயதில் கருத்தரிக்க தயாரானாள்
என்பதை அவளால் நினைத்து பார்க்க முடியவில்லை..
பெண்மையின் எல்லை தொட்ட மகிழ்வில்
ஆனந்த கண்ணீரிட்டாள்..."
என பாதி கதை எழுதி கொண்டிருக்கும்போதே
கண்ணீர் நனைத்தது வெள்ளை காகிதத்தை...
இருபத்திரண்டு வயதை தீண்டியும்
பூத்திராத இந்த அழகிக்கு...
இவள் வேண்டுவதும் வலியே .. !!!

0 Comments