போர்வை விலக்கி விடிந்ததை அறிந்தான்...
தூக்கம் கலைந்து காலாட்டி படுத்திருந்த
மனைவியை திரும்பிப்பார்த்து
எழுந்து சென்றான் சமையலறை...
இவனை போலவே வாடியிருந்தது காய்களும்...
தன்னிலை அறிந்தவனாய் அறிந்தான் அவற்றை..
ஹெட்செட் போட்டு பாடல் ரசித்து கொண்டிருந்தவள்
என்னங்க என்ன பண்றிங்க என்றாள்
குளிக்க போறன்.. சொல்லி கிளம்பினான்..
சமையலை முடித்து, பாத்திரம் துலக்கி
பத்திரமாய் கிளம்பி நின்றவனை
சிறிதும் திரும்பி பார்த்திராத அவள்
நாய்குட்டி தலைத்தடவி விளையாடினாள்..
கிளம்புவதாக விடைபெற்றவனிடம் வினவினாள்..
வேலையாள் வந்து போய்ட்டாங்களா ?
அவள் தலைக்கோதி, கைப்பிடித்து
அவள் அறை அழைத்து சென்றவன்
பார்வையற்ற கண்களில் முத்தமிட்டு
புன்னகை துடைத்து சென்றான்....

0 Comments