நெத்திச்சுட்டி முத்தமிட்டு
நெஞ்சமெல்லாம் நெனைஞ்சதுண்டு..
ஈர மனசுலயும்
குளிரோட நான் நடுங்க..
குதிரைக்கால் சத்தமெல்லாம்
கனவோட போனதிங்கே...
சொத்துப்பத்து சேத்து வைக்க
அப்பன் ஆத்தா எனக்கில்ல..
சேத்துவச்ச ஆசையெல்லாம்
உசுரோட முளைக்கவில்ல..
சாயம் பூசி அழகுப்பாக்க
சாயங்காலம் நேரமில்ல..
சாஞ்சி படுத்துப்புட்டா
கஞ்சி காச்ச ஆளுமில்ல..
தொட்டு ரசிச்சிடவே
மரமெல்லாம் நிக்குதுங்க
அத்தோட ஒரு மரமா
என் மனசும் ஏங்குதுங்க..
மகரந்த சேவையெல்லாம்
பூக்கூட செய்யுதுங்க
மனசோட வச்சுக்கிட்டு
மனுஷியா நா வாழுறேங்க...!!!
நெஞ்சமெல்லாம் நெனைஞ்சதுண்டு..
ஈர மனசுலயும்
குளிரோட நான் நடுங்க..
குதிரைக்கால் சத்தமெல்லாம்
கனவோட போனதிங்கே...
சொத்துப்பத்து சேத்து வைக்க
அப்பன் ஆத்தா எனக்கில்ல..
சேத்துவச்ச ஆசையெல்லாம்
உசுரோட முளைக்கவில்ல..
சாயம் பூசி அழகுப்பாக்க
சாயங்காலம் நேரமில்ல..
சாஞ்சி படுத்துப்புட்டா
கஞ்சி காச்ச ஆளுமில்ல..
தொட்டு ரசிச்சிடவே
மரமெல்லாம் நிக்குதுங்க
அத்தோட ஒரு மரமா
என் மனசும் ஏங்குதுங்க..
மகரந்த சேவையெல்லாம்
பூக்கூட செய்யுதுங்க
மனசோட வச்சுக்கிட்டு
மனுஷியா நா வாழுறேங்க...!!!

0 Comments