கவிதை சில்லறைகள் 01

மீசை மெல்ல கீறும் உன்னை
ஆசை எல்லாம் தீரும் வரை..
ஓசை கொஞ்சம் ராகம் பாட
பாஷை கொஞ்சும் மோகம் தீர..!



பேசி பேசி இட்ட சண்டை, 
பேசாமல் போகும்போதுதான் புரிகிறது... 
அவள் பேச்செல்லாம் என் மூச்சென...!!!



வாடகை பணம் கொடுக்க 
இயலாமல் வீட்டை நிர்கதியாய் 
விட்டு சென்றவனின் வீட்டில்..
கண்ணாடிப் பெட்டிக்குள்.. 
கூட்டத்தில் ஓர் உயிராய்..
இரைக்காய் காத்திருக்கும் 
சிறு மீன்போல தவிக்க விட்டாயே
என்னை....!!!!

உன் சில சொற்களுக்காக...!!!

Post a Comment

0 Comments