கண்ணாடி மீன்கள் ..!!!

பெண் :
ஆயிரம் வேலை செய்தாலும் 
பெயரோ புகழோ இல்லாமல் 
கண்ணாடி தொட்டிக்குள் 
எந்நேரம் சிறகடிக்கும் 
மீனாய்..!!! 

ஆண் :
தன்னுலகம் சிறிதென
குடும்பம் மட்டுமே எண்ணி
விழி திறந்த மீனாய்
தூக்கம் தொலைப்பவன்...!!!

குழந்தை :
தன்னுலகம் பெரிதென
குதித்து விளையாடும்
கண்ணாடிப்பெட்டிக்குள்
மீனாய்..!!!

திருநங்கை :
சுதந்திரத்தில்
அவ்வப்போது மகிழ்வு,
கண்ணீர் சிதைந்தாலும்
கண்ணுக்கு தெரியாமல்
போவதால் கவலையுடன்
கவலை கடக்கும் வாஸ்து மீன்...!!!

Post a Comment

0 Comments