வார்த்தை வேசி..!!!

காத்திருக்கும் அனைவருக்கும் 
காதல் காட்டி பூத்திருப்பாள்..
வார்த்தை மட்டும் கொடுத்துவிட்டு 
வாழ்க்கையதை தொலைத்திருப்பாள்...

அள்ளி அள்ளி கொஞ்சிடும்
வார்த்தை அதை அணைத்தே
பஞ்சுமெத்தை மேலே அவள்
கால் நீட்டி வீற்றிருப்பாள்...

நேரம் அதை கக்கத்தில் வைத்து
காரம் அதை கால் நடுங்க
கொடுத்திருப்பாள்.. கவலை
தொலைக்க.. ஆசை நிலைக்க..

ஆண்களை வேட்டையாடி
வார்த்தை நெடிக்குள் மூழ்கியே
தினம் தினம் சுகம் மனம்..
பணம் பணம் மணம் மணம்...

வார்த்தைகளுக்கு மட்டுமே
வேசியிவள்... வாழ்க்கைக்கு அல்ல..!!!

Post a Comment

0 Comments