பார்த்தவை ரசிக்கும் பள்ளிப்பருவம்..
ஆசிரியர் பார்வை கழுகாக..
நானோ இளமை மெழுகாக..
பார்வைக்கு நானே இறையானேன்
என்னுள் நானே சிறையானேன்...
ஆசிரியர் பார்வை கழுகாக..
நானோ இளமை மெழுகாக..
பார்வைக்கு நானே இறையானேன்
என்னுள் நானே சிறையானேன்...
வகுப்பில் சிறந்த மாணவன் நான்..
வாழ்க்கையில் புரிந்தேன் யாரென நான்..
எனக்குள் ஏதோ புது மாற்றம்
வாழ்வில் பெரிய ஏமாற்றம்...
நடை உடை மெல்ல நான் மாற்ற
நகைத்தனர் எனைக்கண்டு வெறியேற்ற...
எனக்குள் நானே பெண்ணானேன்
சொல்ல முடியா மண் ஆனேன்...
கிண்டல் கிரீடம் தாங்கினேன்..
அவமான அணிகலன் பூண்டே திரிந்தேன்..
வீட்டில் சொல்ல... விடியல் கொண்டேன்....
விடுதி இனியென முடிவே செய்தேன்..
ஆண்கள் கழிவறை சற்றே கசப்பு..
எமக்கென இல்லை.. அதுவே இழப்பு...
பார்வை எல்லாம் சுட்டது
கடவுள் தலையில் இட்டது...
திருமணமில்லா இருமனம் சேர்ந்து
எடுத்தோம் ஓர் பிள்ளை தத்தாக
வளர்ப்போம் எங்கள் சொத்தாக..
காலம்வழி நாம்சென்றிட
எல்லாம் நடக்கும் பித்தாக...!!!
வாழ்க்கையில் புரிந்தேன் யாரென நான்..
எனக்குள் ஏதோ புது மாற்றம்
வாழ்வில் பெரிய ஏமாற்றம்...
நடை உடை மெல்ல நான் மாற்ற
நகைத்தனர் எனைக்கண்டு வெறியேற்ற...
எனக்குள் நானே பெண்ணானேன்
சொல்ல முடியா மண் ஆனேன்...
கிண்டல் கிரீடம் தாங்கினேன்..
அவமான அணிகலன் பூண்டே திரிந்தேன்..
வீட்டில் சொல்ல... விடியல் கொண்டேன்....
விடுதி இனியென முடிவே செய்தேன்..
ஆண்கள் கழிவறை சற்றே கசப்பு..
எமக்கென இல்லை.. அதுவே இழப்பு...
பார்வை எல்லாம் சுட்டது
கடவுள் தலையில் இட்டது...
திருமணமில்லா இருமனம் சேர்ந்து
எடுத்தோம் ஓர் பிள்ளை தத்தாக
வளர்ப்போம் எங்கள் சொத்தாக..
காலம்வழி நாம்சென்றிட
எல்லாம் நடக்கும் பித்தாக...!!!

0 Comments